Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்பருத்தி சீரியலின் ஹீரோ இவ்வளவு தலைக்கனம் பிடித்தவரா? இயக்குனர் கூறிய ஷாக்கிங் உண்மைகள்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் சீரியல் செம்பருத்தி. ஆரம்பத்தில் யாரும் இந்த சீரியலை கண்டுகொள்ளாவிட்டாலும் பிறகு ரசிகர்களிடையே பிரபலமாக தொடங்கி கடந்த மாதத்தில் TRPயில் முதலிடம் பிடித்து ஆச்சரியப்படுத்தியது.

எந்த அளவிற்கு பிரபலமானதோ அந்த அளவிற்கு சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என தொடங்கி ஹீரோவின் நண்பர் வரை சீரியலில் இருந்து பெரும்பாலானோர் தூக்கியெறிப்பட்ட நிலையில் இச்சீரியலின் ஹீரோ ஆதி பற்றிய அதிர்ச்சிகர உண்மைகள் சில வெளிவந்துள்ளன.

அதாவது, ஆரம்பத்தில் இந்த சீரியலில் நடித்தபோது இவர் அமைதியாக தான் இருந்தாராம். அதன் பின் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, அதன் பின் இவர், அந்த யூனிட்டில் இருக்கும் சக நடிகர்களிடமே மிகவும் மோசமாக நடந்துகொண்டாராம்.

அதுமட்டுமின்றி, எனக்கு மற்றவர்களுக்கும் வித்தியாசம் உண்டு, அனைவருக்கும் கொடுப்பது போன்றே எனக்கு சாப்பாடு கொடுக்காதீர்கள் என்று கோபப்படுவாராம். சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது, உடன் நடிக்கும் ஆர்ட்டிஸ்ட் அதிக டேக் வாங்கினாலோ அல்லது ஏதேனும் ஒரு சீன் நன்றாக வரவில்லை என்றால், டைரக்டர் ரீடேக் என அழுத்தி சொன்னாலோ உடனே அப்செட்டாகி அந்த இடத்தை விட்டு சென்றுவிடுகிறாராம்.

இதனால் அவரை மீண்டும் அழைத்து வருவதற்குள் போதும்... போதும்... என்றாகிவிடும் என்று இந்த சீரியலின் உதவி இயக்குனர் ஒருவர் அழாத குறையாக கூறியுள்ளார்.