Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், ரஜினி, கமல் என பலருக்கு பாடிய பிரபல பாடகருக்கு கொலை மிரட்டல்!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், தனுஷ் என பல நடிகர்களின் படங்களில் பாடியவர் பின்னணி பாடகர் உதித் நாராயண். ஹிந்தி சினிமாவின் பிரபல பாடகரான இவர் தமிழ் சினிமாவுக்கு காதலன் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் ரஜினிக்கு முத்து, சிவாஜி, கமலுக்கு காதலா காதலா, அன்பே சிவம் ஆகிய படங்களில் பாடினார்.

விஜய்க்கு கோயமுத்தூர் மாப்பிள்ளை, மதுர, ஷாஜகான், பகவதி, திருமலை, கில்லி, சிவகாசி, குருவி என பல படங்களில் பாடியுள்ளார். இந்நிலையில் அவருக்கு போன் போன் மூலம் கடந்த ஒரு மாத காலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது.

இது குறித்து அவர் மும்பை அம்போலி போஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். இதில் அவர் புதிய எண்ணில் இருந்து ஒருவர் தொடர்ந்து மிரட்டல் விட்டுள்ளார். அது யார் என கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் இது குறித்து விசாரணையில் திருடு போன செல்போனில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. அது அவரின் பாதுகாவலர் பெயரில் இருந்துள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஒரு மாதத்திற்கு முன் வேலை முடிந்து வீட்டிற்கு போகும் போது போன் திருடுபோனதாக அந்த பாதுகாவலர் கூறியுள்ளார்.