Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்... பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் அதிரடி கருத்து

பெண்களை பேருந்தில் உரசியதாக கூறிய விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்ட பிறகும் கூட திருப்திபடாத பிக்பாஸ் குழு, அவரை நேற்று அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினர்.

இதனை சற்றும் எதிர்பாராத பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கன்ஃபெஷன் ரூமில் இருந்தபடியே வெளியேற்றப்பட்டார் சரவணன். இதனால் ஹவுஸ்மேட்ஸ்களும் அதிர்ச்சியடைந்தனர். சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்தும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சரவணன் வெளியேற்றம் குறித்து பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆமாம்.. எதிர்பாராத டிவிஸ்ட். கடந்த வாரம் முழுவதும் செலிபிரிட்டிகளும் பொதுமக்களும் இவருக்கு ரெட்கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என கூறியிருந்தனர். அதற்காக கூட இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார் சாண்டியின் முன்னாள் மனைவியும் பிக்பாஸின் முன்னாள் போட்டியாளருமான காஜல் பசுபதி.