Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வையை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்- சரியான பதிலடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்

நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியானது. பெண்களின் சுதந்திரம் பற்றி பேசும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், நேர்மறையான விமர்சனங்களையும் இப்படம் பெற்று வருகிறது.

ஆனால், பிரபல யூடியுப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன் இப்படத்தை வழக்கம் போல் மிகவும் கிண்டலடித்து விமர்சித்தார். இப்படம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும் கூறியிருந்தார். இதனால், அஜித் ரசிகர்கள் கொதிப்படைந்து அவரை கண்டபடி திட்டி கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், புகை மற்றும் மது அருந்தும் பெண்கள் ஒரு ஆணை தொட்டு பேசினால் அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள் என மாறன் நினைக்கிறார். அத்தகைய ஆண்களில் ஒருவராகத்தான் மாறன் இருக்க வேண்டும். அவரது இளம் வயதில் அவர் இப்படி பெண்களிடம் நடந்திருப்பார் அல்லது இன்னும் அந்த விஷயங்களை செய்துகொண்டு தான் இருப்பார். அதனால்தான் அவரின் விமர்சனங்கள் இப்படி இருக்கிறது என மிகவும் காட்டமாக டிவிட் செய்துள்ளார்.