Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனது காதலர் இப்படி தான் இருக்க வேண்டும்! பிரபல டிவி தொகுப்பாளனி அனிதா சம்பத் ஓபன்டாக்

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா.

தற்போது பிசியாக இந்த தொலைக்காட்சியில் வேலை செய்வது மட்டுமில்லாமல் சினிமாவிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனக்கு காதல் திருமணத்தின் மீது தான் நம்பிக்கை உள்ளது என்றும் தனக்கு காதலராக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், எப்படி இருக்கணும் வேண்டும் நினைக்கிறதைவிட எப்படி இருக்கக்கூடாது என்று முதலில் சொல்லி விடுகிறேன். போனில் அடிக்கடி 'நீ சொல்லு... அப்புறம் என்ன...' என்று கேட்டு மொக்கை போடுகின்ற பையனாக இருக்கக்கூடாது. சினிமாத்தனமான காதலாகவும் இருக்கக்கூடாது. ஏனென்றால், இந்த மாதிரியான காதல் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது. பபுள்காம் மாதிரி முதலில் ஸ்வீட்டா இருக்கும். அப்புறம் எப்போடா கீழே துப்புவோம் என காதல் இருக்கக்கூடாது என்றார்.