Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு-வும் மூன்றெழுத்து தானே..? வெங்கட் பிரபு பதிவிட்ட வீடியோ பார்த்துவிட்டு ரசிகர்கள் கேள்வி

இயக்குனர் வெங்கட் பிரபு சிம்புவை வைத்து மாநாடு என படம் இயக்கவிருந்தார். ஆனால் அது துவங்க தாமதம் ஆனதால் சிம்பு அதில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை சிம்புவை விமர்சிக்கும் வகையில் மறைமுகமாக சுதந்திர தின வாழ்த்து ட்விட் போட்டிருந்தார் வெங்கட் பிரபு.

இந்நிலையில் தற்போது ஒரு பழைய படத்தின் விடியோவை ஆச்சர்யப்பட்டு பதிவிட்டுள்ளார் அவர். அதில் வரும் வசனங்களில் 'மூன்றெழுத்து.. மூன்றெழுத்து' என அடிக்கடி வருகிறது. இதை எழுதியது யார் என அவர் வியப்புடன் கேட்டுள்ளார் அவர்.

அந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் 'சிம்பு-வும் மூன்றெழுத்து தான். அவரை பற்றித்தான் இந்த ட்விட்டா?' என கேள்வி எழுப்பி வருகின்றனர்.