Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய்! அடித்து கூறும் சினிமா பிரபலம்

பிக்பாஸில் இன்று எந்தவொரு ஆர்பாட்டமும் இன்றி அபிராமி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஏனென்றால் அவர் தான் எலிமினேட் ஆவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் நேற்று யாரும் சிறிது கூட எதிர்பார்க்காத மதுமிதா கையில் கட்டுடன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் எதற்காக வெளியேறுகிறார் என்பதை காட்டவும் இல்லை, பிக்பாஸ் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கவும் இல்லை.

மதுமிதா காவிரி தண்ணீர் பிரச்சனை காரணமாக கவீனுடன் சண்டை போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், மதுமிதாவிற்கு நடந்தது எல்லாமே பக்கா ஸ்க்ரிப்ட் என்று அடித்து கூறுகிறார், கவீனின் நட்புனா என்னானு தெரியுமா படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரவீந்தர்.

பிக்பாஸை ஆரம்பத்தில் இருந்து உன்னிப்பாக கவனித்து வரும் இவர் இதுகுறித்து கூறுகையில், பிக்பாஸில் தேவை ஏற்படும் நேரத்தில் ஸ்க்ரிப்ட் யூஸ் செய்யப்படுகிறது. எப்படியென்றால், மதுமிதாவை வந்த புதியதில் கவீனும் சாண்டியும் அப்படி கலாய்த்தார்கள். அப்போதெல்லாம் வராத கோபம் சாண்டி தன்னை போன்று நடனமாடி காட்டினார் என்பதற்காக அன்று நாட்டாமை டாஸ்க்கின் போது மதுமிதாவிடம் இருந்து வெளிவந்தது.

அதே போல் நேற்று கையில் கட்டுக்கட்டி வருவாராம். ஆனால் என்ன நடந்தது என்பதை காட்ட மாட்டார்களாம். இதெல்லாம் பக்கா ஸ்க்ரிப்ட். ஒன்று மதுமிதாவை சரவணணை போன்று வெளியேற்றிருக்க வேண்டும் அல்லது ஃபுல் ஹாண்ட் ட்ரெஸ் போட்டு கொண்டு அதை மறைத்துகொண்டு வெளியே வந்து வேற எதாவது காரணத்தை சொல்லியிருக்க வேண்டும் என ஆதங்கத்தை கூறினார், ரவீந்தர்.