Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணீரே வரவில்லை! பிக்பாஸ் லொஸ்லியாவை மறைமுகமாக தாக்கி பேசிய முன்னாள் போட்டியாளர்

பிக்பாஸின் மூன்றாவது சீசனில் இலங்கையில் இருந்து கலந்துகொண்டிருப்பவர் லொஸ்லியா. செய்தி வாசிப்பாளரான இவருக்கு பிக்பாஸ் துவக்கத்தில் மிக பெரிய ஆர்மி உருவானது.

ஆனால் அதன்பின் லொஸ்லியாவின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிந்ததால் ஆர்மியின் எண்ணிக்கை சற்று குறைந்தது. குறிப்பாக சிறையில் அவர் அபிராமியுடன் செய்த லூட்டிகள் பலருக்கு முகச்சுளிவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிக்பாஸின் முதல் சீசன் போட்டியாளர் காயத்ரி ரகுராம், நானும் கடந்த முன்று நாட்களாக பார்த்து வருகிறேன், ஒருவர் அழுவதற்கு கடினமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கண்ணீர் தான் வரவில்லை. பொய் பொய் பொய். அழுவதற்கு முன்பே கையில் நாப்கின் வைத்திருக்கிறார் என லொஸ்லியாவை மறைமுகமாக தாக்கி ட்விட் செய்துள்ளார்.

லொஸ்லியா நேற்று அபிராமி வெளியேறிய போது அவரை கட்டிப்பிடித்து அழுதார். ஆனால் கண்ணீர் தான் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.