Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியேறும்போது முகேனிடம் ஏன் பேசவில்லை? பிக்பாஸில் எலிமினேட் ஆன அபிராமி கூறிய பதில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் அபிராமி. இவர் பிக்பாஸ் வீட்டினுள் முகேனை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

ஆனால் முகேனோ தனக்கு வெளியில் ஒரு காதலி உள்ளார் என்று கூறிவிட்டார். அதன்பின்பும் இருவரும் ஒன்றாக சுற்றி கொண்டு வந்தனர்.

அதுவும் அபிராமி வெளியேறிய போது முகேன் அவரது மெடலை ஒட்ட வைத்து பார்த்து கொண்டிருந்தார். ஆனால் அப்போது அபிராமி அவரிடம் அவ்வளவாக பேசாமல் உடனே வெளியே வந்துவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து ரசிகை ஒருவர் கேள்வி கேட்க, அவனுக்கு அதற்கு மேலும் வலி கொடுக்க விரும்பவில்லை. நான் வெளியேறும்போதும் அவனை தொந்தரவு செய்ய விருப்பமில்லை என கூறியுள்ளார்.