Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாதீர்கள்? மதுமிதாவிற்காக பொங்கிய பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எந்தவொரு காரணமும் சொல்லப்படாமல் மதுமிதா வெளியேற்றப்பட்டார். கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அவர் வெளியேற்றப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்சமயம் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ள இவ்விஷயத்திற்கு மதுமிதா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இவ்வளவு ஏன், அவர் வீட்டில் இருந்தே வெளியே வர கூடாது என பிக்பாஸ் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து கேட்டுகொண்டதால் அவர் வெளியேவே வரவில்லை.

இந்த விஷயத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளையும் மதுமிதாவிற்கு தங்களது ஆதரவுகளையும் கூறி வரும் நிலையில், மதுமிதா வெளியேறுவதற்கு முன்பே எலிமினேட் ஆன ரேஷ்மா, அவரது தனிமைக்கு மரியாதை கொடுங்கள். அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.

என்ன நடந்தது என்பது தெரியாமல் குறிப்பிட்ட ஒருவரை நிஜ வாழ்கையிலோ அல்லது நிழல் வாழ்க்கையிலோ தீர்மானிக்க வேண்டாம். கடவுள் அவரை(மதுமிதாவை) காப்பாற்றுவார் என குறிப்பிட்டுள்ளார்.