Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் புகழ் பிரபல நடிகரின் வீட்டில் தீ விபத்து! மனைவி, குழந்தைகளுடன் நள்ளிரவில் நடந்த சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் ஹிந்தியில் நடக்கு நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் கடந்த 2018 ம் வருடம் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 12 ல் போட்டியாளராக பங்கேற்றவர் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் டீம் 5 என்ற படத்திலும் நடித்துள்ளார்.

பல சர்ச்சைகளை கடந்து அவர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்தார் (Runner). தற்போது கேரளாவின் கொச்சியில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் வீட்டு முன் பகுதியில் கரும்புகை சூழ பலத்த காற்று வீசியதால் தீயாக மாறியது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து ஸ்ரீசாந்த் அவரின் மனைவி புவனேஸ்வரி மற்றும் குழந்தைகளை காயமின்றி பத்திரமாக மீட்டனர்.

மேலும் வீட்டின் முன்பக்கம் எரிந்து நாசமாகியுள்ளதாம்.