Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மன்னிப்பு கேட்ட புதுப்பொண்ணு அனிதா! நிகழ்ச்சி தொகுப்பாளியின் திருமண ரகசியம் இதுதானாம்

செய்தி வாசிப்பின் மூலம் பிரபலமானவர்கள் சிலர். தெளிவான உச்சரிப்பும், அழகான தோற்றமும் அவர்களுக்கு மிகவும் முக்கியம். அண்மைகாலமாக செய்தி வாசிப்பாளர்கள் சீரியல், சினிமா என வந்துகொண்டிருக்கிறார்கள். இதில் சர்கார் படத்தில் சில நிமிடம் செய்தி வாசித்து பிரபலமானவர் அனிதா சம்பத்.

அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) திருமணம் நடைபெற்றது. இது திடீர் திருமணம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.

இதில் அவர் திடீர் திருமணம் என்றில்லை. எங்கள் இடையில் 3 வருட காதல். பெரியவர்கள் சம்மதத்தோடு தான் திருமணம் நடைபெற்றது. நான் ஃபேஸ்புக்கை அதிகம் பார்ப்பதில்லை. இன்ஸ்டாகிராமில் திருமணம் குறித்து கடந்த 22 ம் தேதியே போட்டுவிட்டேன்.

ஆனால் ஏதோ காரணத்தால் இன்ஸ்டாகிராம் பிளாக் ஆகிவிட்டது. திருமணத்தை அதிக செலவில் நடத்த விருப்பமில்லை. குடும்பத்தார்கள், மிக நெருங்கிய நண்பர்களை மட்டுமே அழைத்தேன். முன்பே திருமணம் பற்றி சொல்லிவிட்டால் யூடுயூப் சானல்கள் வந்துவிடுவார்கள். பின் நான் அழைக்காதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் கடைசியில் பதிவிடுகிறேன். மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.