Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்! பொது மேடையில் பெருமையுடன் பேசிய பிரபல நடிகை

அஜித் சினிமா படங்களில் சொல்லப்படும் விசயம் மக்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் என்பதால் ரசிகர்களுக்கு நல்ல விசயங்களை சொல்லவே துடிக்கிறார்.

இவ்வருடம் வந்த விஸ்வாசம் படமும் அப்பா மகள் உறவை அழகாக சொல்லும் படமாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல அண்மையில் வந்த நேர்கொண்ட பார்வை படமும் பெண்களுக்கான நீதியை மீட்கும் போராட்டமாக அமைந்தது.

இந்நிலையில் யுனிசெப் விழாவில் கலந்துகொண்ட நடிகை திரிஷா பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம், இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம், அதற்கான வலுவான சட்டம் தேவை.

அவர்களின் உரிமை பற்றி கூடுதல் விழிப்புணர்வு வேண்டும், கிராம பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அஜித் ஒரு சூப்பர் ஸ்டார், நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என அவர் கூறினார்.