Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிக் டாக் பிரபலம் செய்த மோசமான செயல்! கும்பலாக சுற்றிவளைத்து கைது செய்த போலிஸ்

அண்மையில் வந்து மிக பிரபமலமான ஒரு செயலி டிக் டாக். இதில் பலரும் இணைந்து சினிமா வசனங்களுக்கு டப்ஸ் மாஸ் செய்வது, பாடல்களுக்கு நடனமாடுவது என செய்து வருகிறார்கள்.

இதில் பிரபலமானவர்களை பின் தொடரும் பெரும் ரசிகர்கள் கூட்டமும் இருக்கின்றது. அதே வேளையில் ஆபாசங்களும், ஆபத்துகளும் இதில் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

இதில் உத்திரபிரதேஷ் மாநிலம் பலந்த்ஷஹர் பகுதியை சேர்ந்த 23 வயது ஷாருக் என்பவரும் டிக் டாக்கில் நடனமாடி 40 ஆயிரம் ஃபாலோவர்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரின் நண்பர்கள் 5 பேர் கூட்டாக இணைந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஷாருக்கிற்கும் தொடர்பு இருப்பதால் அனைவரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.