Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் லாஸ்லியா அப்பாவுக்கு நேர்ந்த சோகம்! உண்மை பின்னணி இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 80 நாட்களை கடந்து விட்டது. இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் விசிட் செய்கிறார்கள்.

இதில் நேற்று லாஸ்லியாவை காண அவரின் அப்பா மரியநேசன் கனடாவில் இருந்து வந்துள்ளார். அவர் யார்? அவரின் பின்னணி என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்.

தமிழர்கள் அதிகம் நிறைந்த வட இலங்கை கிளி நொச்சியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக லாஸ்லியாவின் குடும்பத்தினர் கிழக்கு பகுதியான திரிகோணமலைக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.

அன்புவெளிப்புரம் பகுதியில் ஓலை வீட்டில் மிகுந்த சிரமத்தோடு வாழ்ந்துள்ளனர். மேலும் லாஸ்லியாவின் அப்பா மிகுந்த கஷ்டத்துடன் ஓட்டுனராக பணியாற்றி குடும்பத்தை பாதுகாத்து வந்துள்ளார்.

2009 க்கு பிறகு குடும்பத்தின் தேவை கருதி தொழில் மூலம் வருமான ஈட்ட வாய்ப்பு தேடி கனடா நாட்டுக்கு சென்றுள்ளார்.