Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாஸ்லியாவின் அப்பாவை நோகடித்த அசிங்கமான அந்த ஒரு கேள்வி! மன்னிப்பு கேளு - அப்பா, தங்கைகள், அம்மா போட்ட கட்டளை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது பலரின் உணர்வுகளை தூண்டும் விதமாக சோகம், கவலை, பாடம், சந்தோசம் என எல்லாம் இருக்கிறது. காரணம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே வருவதால் தான்.

தற்போது லாஸ்லியாவின் அப்பா, தங்கை, அம்மா எல்லோரும் லாஸ்லியாவை காண வந்துள்ளார்கள். உள்ளே வந்ததும் லாஸ்லியாவின் அம்மா கண்ணீர் விட்டு கதறி மகளை நினைத்து அழுதார்.

மேலும் லாஸ்லியாவின் தங்கைகள் அப்பா அம்மாவை நினைத்து பார் அக்கா, தொடர்கதையை இங்கேயே முடித்துவிடு, கடந்த இரு நாட்களில் எப்படி இருந்தாயோ அப்படியே இரு என கூறுகிறார்.

லாஸ்லியாவின் அப்பாவும், அம்மாவும் எங்கள் மகளை பற்றி எங்களுக்கு தெரியும், விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். யார் ஜெயித்தாலும் சந்தோசம் என கூறினார்.

மேலும் லாஸ்லியாவின் அப்பா நான் இந்தியா வருகிறேன் என கூறியதும் சிலர் மகளின் கல்யாணத்திற்காகவா போகிறீர்கள் என கேட்டார்கள். மனசுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது என கூறினார்.

கமல் சார் வரும் போது கால் மேலே கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறாய். அது தவறு. கமல் சாரிடம் மன்னிப்பு கேள் என கூறுகிறார்.