அனுஷ்கா-விராட் கோலி வீட்டிற்கு ஒரு மாத வாடகை மட்டும் இத்தனை லட்சமா? ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் நீண்ட வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது அவர்களை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மும்பை ஒர்லி பகுதியில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் புது சொகுசு அபார்ட்மெண்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
அதன் ஒரு மாத வாடகை மட்டுமே 15 லட்சம் ரூபாய். மேலும் ஒன்றரை கோடி ருபாய் டெபாசிட்டாக விராட் கோலி அந்த வீட்டிற்கு பணம் செலுத்தியுள்ளாராம்.