பிகில் படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ தற்போது விஜய் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை தாம்பரம் அருகில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடந்து வருகிறது.
விழாவில் பேசும்போது இயக்குனர் அட்லீ தான் கருப்பு என விமர்சிப்பவர்களுக்கு மேடையிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.
"ஆங்கிலம், ஹிந்தி என்பது மொழி மட்டும் தான் அறிவு அல்ல. அது போல கருப்பு என்பது நிறம் மட்டும்தான்" என அவர் கூறியுள்ளார்.