Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் கொடுத்த வாழ்க்கை, அழைத்தால் முதல் ஆளாய் போய் நிற்பேன்.. முன்னணி இயக்குனர்

விஜய்யின் பிகில் படத்தை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி64 படத்தில் விஜய் நடிக்கிறார். அதன் பிறகு விஜய் பேரரசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என செய்தி பரவி வருகிறது. பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கும் அவர் வந்திருந்தார்.

இந்நிலையில் இது பற்றி பேரரசு ஒரு பேட்டியில் பேசியுள்ளார். "எனக்கு அழைப்பு வந்தது சென்றேன். எனக்கு வாழ்க்கை கொடுத்தது ஆவர்த்தான். அவர் அழைத்தால் முதல் ஆளாய் போய் நிற்பேன். இது நட்பு ரீதியாக, விஸ்வாசம்" என கூறியுள்ளார்.

மேலும் தளபதி65 படத்தை இயக்குவதாக வந்த செய்தி பற்றி பேசிய அவர் "முதலில் செய்தியாக வந்தது. அதன் பிறகு உறுதி என செய்தி வந்தது. அது உறுதியான செய்தி இல்லை. இதற்கு முன்பே அவரிடம் ஒரு அரசியல் கதை சொன்னேன். அப்போது சர்க்கார் படம் நடித்துக்கொண்டிருந்ததால் உடனே அரசியல் கதை வேண்டாம் என கூறினார். அதன் பிறகு வேறொரு கதை ரெடி செய்து வைத்திருக்கிறேன். விஜய் அழைப்புக்காக காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.