கண் தெரியாதவர் ஒருவர் பாடிய பாடலை கேட்டு உடனே வாய்ப்பு தந்த இமான் - நெகிழ்ச்சி நிகழ்வு, வைரலாகும் வீடியோ
பாட்டு பாடுவது என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். மற்றவர்கள் முன்பு தன்னை அறியாமலேயே பாடுபவர்களும் உண்டு. கூச்சப்பட்டு வீட்டில் தனியே பாடுபவர்கள் உண்டு.
அண்மைகாலமாக டிவி நிகழ்ச்சிகள், பாட்டுபோட்டிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நன்றாக பாடி செல்போன் வீடியோ மூலம் சமூகவலைதளங்களில் பிரபலமான சாதாரணமானவர்களும் உண்டு.
பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண் அண்மையில் தன் குரல் வளத்தால் ஹிந்தி சினிமாவில் பாடகி ஆனதை அண்மையில் நாம் பார்த்தோம்.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலை பாடி தற்போது மாற்றுத்திறனாளி ஒருவர் பாடி அசத்த அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
இதற்கு பின்னணி பாடகி ஸ்வேதாவும் வாழ்த்தி வணங்கியுள்ளார். திறமைக்கு வாழ்த்துக்கள்.. அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே..
தற்போது விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான் அந்த நபருக்கு தன்னுடைய படத்தில் பாடும் வாய்ப்பளித்துள்ளாராம்.
Fantastic 🙏 https://t.co/TD3y0bACQN
— Shweta Mohan (@_ShwetaMohan_) September 21, 2019