Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகையாகும் விஜய் பட இயக்குனர், நடிகரின் மகள்! புகைப்படத்திற்கு பிக்பாஸ் சேரன் கொடுத்த கமெண்ட்

விஜய் நடித்த புதிய கீதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.பி.ஜெகநாத். கோடம்பாக்கம், சேரன் நடித்த ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்ப காணோம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், பசங்க 2, அண்மையில் வந்த நம்ம வீட்டு பிள்ளை என பல படங்களிலும் ஜெகநாத் நடித்துள்ளார்.

அடுத்து வெளியாக இருக்கும் மிக மிக அவசரம் படத்தில் கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் அவரின் மகள் ஸ்னாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்.

இதற்கு பிக்பாஸ் சேரன் வாழ்த்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.