Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா, இசையுலகில் கலக்கிய பிரபல இசைக்கலைஞர் மரணம்! திரையுலகம், ரசிகர்கள் சோகம்

தமிழ் சினிமாவில் தன் இசைத்திறமையை காட்டியவர்கள் பலர். அதில் ஒருவர் கத்ரி கோபால் நாத். சாக்சபோன் இசைக்கருவி வாசிப்பதில் கைத்தேர்ந்தவரான இவர் கர்நாடக இசையுலகில் பெரும் ஜாம்பவானாக விளங்கியவர்.

இந்தியா, வெளிநாடு என பல இடங்களில் இசைக்கச்சேரிகள் நடத்தியவர். கர்நாடகாவின் மங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் 1949 டிசம்பர் 11 ல் பிறந்தவர்.

இயக்குனர் பாலச்சந்தர், இசைப்புயல் ரஹ்மான் ஆகியோருடன் சினிமாவில் படங்களில் பணியாற்றியுள்ளார். டூயட் படத்தில் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பாடலுக்கு அவர் வாசித்த சாக்‌சபோன் இசை இன்னும் மறக்க முடியாதது.

69 வயதாகும் அவர் இன்று காலை 4.45 மணியளவில் மாரடைப்பால மங்களூரில் காலமாகியுள்ளார். அவரின் மறைவால் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறுகிறது. அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கையால் பத்ம ஸ்ரீ விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

அவரின் மறைவிற்கு சினி உலகமும் அனுதாபங்களை பதிவு செய்கிறது.