Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் முகெனை வாயடைக்க வைத்த ஒரு தருணம்! இந்த ஒரு புகைப்படம் போதுமே - வேறென்ன சொல்ல

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 போட்டியாளாராக கலந்து கொண்டு 100 நாட்கள் வரை இருந்து பட்டத்தை வென்று வெற்றியாளரானவர் முகென். மலேசியாவை சேர்ந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டுள்ளது என கூறலாம்.

நிகழ்ச்சிக்கு முன் பாடல், ஆல்பம் என யூடுயூபில் செய்து கொண்டு வந்த அவர் அங்குள்ள ரசிகர்களின் ஆதரவை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் உலக தமிழர்கள் மனிதிலும் இடம் பிடித்து தற்போது அமோக ரசிகர்கள், ரசிகைகளின் ஆதரவை பெற்றுள்ளார்.

கடந்த சனி, ஞாயிறுகளில் நிகழ்ச்சி முடிந்ததது. தற்போது அவர் மலேசியா திரும்பிவிட்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முகென் அம்மா மீது அதிக பாசம் கொண்டவர் என்பது நிகழ்ச்சியிலே தெரிந்துவிட்டது. இந்நிலையில் மலேசியா வந்த ஒரு அவரை ஒரு அம்மா தன் மகன் போல கருதி கட்டிப்பிடித்து தன் அன்பையும் வாழ்த்துக்களையும் பரிமாறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை வெளியிட்ட முகென் இந்த அன்பை கூற வார்த்தைகள் கிடையாது என தன் எண்ணக்கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.