Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீரா மிதுன் சீக்கிரம் நல்ல மருத்துவராக போய் பாருங்க, அதான் நல்லது, கோபப்பட்ட பிரபல இயக்குனர்

மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து ஒரே சர்ச்சையில் தான் சிக்கி வருகின்றார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர் அந்த வீட்டிற்கு செல்வதற்கு முன்பே ஒரு சில சர்ச்சை இருந்தது.

இந்நிலையில் தான் தமிழ் படங்களிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவரே ஒரு வீடியோவின் கூறியிருந்தார்.

அதிலும் குறிப்பாக மூடர்கூடம் நவீன் இயக்கவிருந்த அக்னி சிறகுகள் படத்தில் அவருக்கு பதில் அக்‌ஷரா ஹாசனை கமிட் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு நவீன் ‘மீரா நல்ல மருத்துவரை போய் பாருங்கள், உங்களுக்கு பெரிய பிரச்சனை உள்ளது, இனி நான் உங்களுக்கு பதில் அளிக்க மாட்டேன்’ என பதில் அளித்துள்ளார்.