Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளிக்கு ரிலீஸாகும் கைதி படம் எப்படி! எல்லோருக்குமான ஒரு ஸ்பெஷல்

தீபாவளி நெருங்க இன்னும் 1 வாரம் கூட முழுமையாக இல்லை. இவ்வருட தீபாவளி ஸ்பெஷலாக அக்டோபர் 25 ல் கார்த்தி நடித்துள்ள கைதி படம் வெளியாகிறது.

விஜய்யின் பிகில் படம் வெளியாகும் அதே நாளிலேயே இப்படமும் வெளியாவது சினிமா வட்டாரத்தில் கூடுதல் சிறப்பு. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

மாநகரம் பட புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்துள்ள இப்படம் ஆக்‌ஷன் படம் போல இருந்தாலும் குடும்பப்பாங்கான விசயம் படம் முழுக்க இருந்து கொண்டே இருக்குமாம்.

நல்ல கதைகளை கொடுத்து வரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்க, வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கும் கார்த்தி இப்படக்கதை தேடிப்பிடித்திருப்பது அவரின் திறமைக்கான களம் என்றே சொல்லலாம்.