Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி செய்த உதவி, கோவில் கட்டி கும்பிடுவோம்.. பிகில் படத்தில் பணியாற்றியவர் உருக்கமான பேச்சு

நடிகர் விஜய் பலருக்கும் உதவி செய்கிறார் என அவ்வப்போது செய்திகள் வந்து கேள்விப்பட்டிருப்போம். தற்போது பிகில் படத்தில் பணியாற்றிய சண்டை கலைஞர்கள் விஜய் பற்றி பேசியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இவர்களிடம் மிகவும் அன்பாக பேசும் விஜய் அவர்களது நலனுக்காக பல்வேறு விஷயங்களை செய்துள்ளாராம். 800 சண்டை கலைஞர்களை FEFSI யூனியனில் சேர்க்க உதவியது விஜய் தானாம்.

"தற்போது மெம்பெர்ஷிப் கார்டுக்காக காத்திருக்கிறோம். அது வந்துவிட்டால் நாங்கள் தளபதி கோவில் கட்டுவோம், எங்கள் யூனியனில் விஜய் புகைப்படத்தை வைத்து கும்பிடுவோம்" என உருக்கமாக டிவி பேட்டியில் பேசியுள்ளார் சண்டை கலைஞர் ஒருவர்.