Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொதித்து போன பிக்பாஸ் சேரன்! வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் முக்கிய நபராக இருந்தவர் இயக்குனர் சேரன். படத்தில் அவர் நல்ல விசயங்களை சொல்லிவந்தது போலவே பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு ஒழுக்க நடவடிக்கைகளை சொல்லி வந்தார்.

உள்ளிருந்தவர்கள் சிலர் ஆரம்பத்தில் அவரை எதிர்த்தாலும் பின்னாளில் அவரை புரிந்துகொண்டனர். அவருக்கு வெளியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சக போட்டியாளர்களின் குடும்பத்திலும் அவருக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. நல்ல விசயங்களை சொல்லி வரும் சேரன் தற்போது கட்சித்தலைவர்களை ஆபாசமாக தரம் தாழ்த்தி பதிவிடுபவர்களை வன்மையாக கண்டித்துள்ளார். அது மட்டுமல்ல நடிகர்களை அவமதித்து பதிவிடுவதையும் அவர் எதிர்த்துள்ளார்.

இதற்காக #CheranFansAgainstCyberBullyng என ஒரு டேக் டிரெண்டாகி வருகிறது.