Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்திற்காக இப்படியுமா செய்வது? - சக விஜய் ரசிகர்களை வருத்தப்பட வைத்த விசயம்

விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு மிக துரிதமாக நடைபெற்று வருகிறது. பட ரிலீஸ் என்றால் பேனர், கட்டவுட் வைப்பது வழக்கம்.

ஆனால் அண்மையில் மாணவி சுப ஸ்ரீ அண்மையில் பேனர் விபத்தால் உயிரிழந்த சம்பவத்தை பிகில் இசை வெளியீட்டு விழாவில் கூறி பேனர், கட்டவுட் வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.

இது ஒரு பக்கம் இருக்க விஜய் ரசிகர்கள் மாரியம்மன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே வேளையில் சிலர் அழகு குத்துவது, பறக்கும் காவடி செய்தது என திகைப்பாக்கியுள்ளது.

இதனை சக விஜய் ரசிகர்கள் சிலர் நல்லெண்ணத்துடன் சினிமாவை ரசியுங்கள், கொண்டாடுங்கள் ஆனால் இது போல வேண்டுதல்கள் வேண்டாம் அறிவுறுத்த, சிலர் வழக்கம் போல வசை பாடவும் செய்துள்ளனர்.

முன்பு ரஜினி ரசிகர்களுக்கு மண் சோறு சாப்பிட்ட நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.