Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாடகி உடலில் வெடிகுண்டுகளுடன் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்ஜடா தன் உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி இந்திய பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்துவிட்டு, இவரை பயங்கரமாக தாக்கி பேசி வருகின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்க்கு ஆதரவாக செயல்பட்டு வருவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என்றும் சிலர் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

ஆனால் அந்த விடியோவை அந்த பாடகி ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார். ஏன் என கேட்டதற்கு 'அப்பா சொன்னதால் நீக்கிவிட்டேன்' என கூறியுள்ளார்.