Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே போடு! டிரெண்டிங்கில் இடம் பிடித்த ரஜினிகாந்த்! யுடுயூபில் பெரும் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தற்போதைய டிரெண்டிங்கில் ட்விட்டரில். காரணம் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் திருவள்ளுவரைப் போல என் மீதும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்: திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன் என எதிர்பாராத அதிரடி கொடுத்துள்ளார் என்பதே.

அவரை பிஜேபியின் ஆதரவாளர் என கூறி வந்த அரசியல் செய்து வந்த அரசியல் புள்ளிக்கு இது ஒரு இடியாக இருக்கும். அதே வேளையில் ரஜினி கூறியதை சற்று ரசிகர்களும் மாத்தி யோசிக்க தொடங்கியுள்ளார்கள்.

இதுகுறித்து அரசியல் வாதிகள் மாறி மாறி தங்கள் கட்சியை, தலைமை பொறுப்பில் இருப்பவரையும் விட்டுகொடுக்காமல் பேசி வருகிறார்கள். அவர்களின் கருத்துக்கள் அதை தெளிவுபடுத்துகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க நேற்று அவர் நடித்துள்ள தர்பார் படத்தின் Motion போஸ்டர் வெளியானது. Youtubeல் இது டிரெண்டிங்கில் உள்ளது. தமிழில் இந்த போஸ்டரை 3 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.

Motion போஸ்டர் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என மற்ற மொழிகளிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • தர்பார் மோசன் போஸ்டர் தெலுங்கு - 622K
  • தர்பார் மோசன் போஸ்டர் தமிழ் - 3 மில்லியன்
  • தர்பார் மோசன் போஸ்டர் மலையாளம் - 250K
  • தர்பார் மோசன் போஸ்டர் ஹிந்தி - 414K