Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் என்ன எதிரியா? லாஸ்லியாவை பிடிக்க காரணம் இதுதான்! பிக்பாஸ் சேரனின் உண்மை பின்னணி

பிக்பாஸ் சீசன் 3 முடிந்து நாட்கள் பல கடந்துவிட்டன. போட்டியாளர்களும் அவரவர்களின் வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார்கள். இந்த சீசனில் கவின் லாஸ்லியாவை காதல் அலை மோதவிட்டு டிவி சானலும் விருவிருப்பு கண்டது என்றே சொல்லலாம்.

லாஸ்லியாவை தன் மகளாக நினைத்தவர் சேரன். கவின் ரசிகர்கள் பலர் சேரனை காதல் விசயத்தில் எதிரி போல தான் பார்க்கிறார்கள். கவினும் இதில் விதி விலக்கல்ல.

அதே வேளையில் ஆரம்பத்தில் சேரன் மிகுந்த பாசம் கொண்டிருந்த லாஸ்லியா காதலுக்கு பின் சற்று இடைவெளியை பின்பற்ற தொடங்கினார் என்பதே உண்மை.

இந்நிலையில் சேரன் அண்மையில் கலந்துகொண்ட நேர்காணலில் இந்த விசயத்தில் தன் மனநிலையை பதிவுசெய்தார்.

இதில் அவர் நானும் என் வாழ்க்கையில் அப்பாவை விட்டு பிரிந்திருந்தேன். லாஸ்லியா அதுபோல தான் என தெரிந்ததும் அவரை பிடித்துவிட்டது. பின்னர் இருவரும் நிறைய பேசிக்கொண்டோம். லாஸ்லியா வாழ்க்கையில் நடந்த பல விசயங்களை கூறிய போது அவரின் மீது அன்பும் அக்கறையும் ஏற்பட்டது.

இவர்களின் காதல் விசயத்தில் என் மனநிலை எப்படி இருந்ததோ அதை தான் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் பெற்றோர்கள் காட்டினர்.

இவ்விசயத்தில் கவினும் நான் நாடகம் நடத்துவது போலவும், எதிரி போலவும் பார்த்தார். அது அவர்களின் வயதுக்கான வெளிப்பாடு. காலம் தான் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பதே என மனநிலை என கூறியுள்ளார்.