Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் இயக்குனருக்கு இன்று இப்படி ஒரு ஸ்பெஷலாம்! குவியும் வாழ்த்துக்கள்

இந்த தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்தை இயக்கியவர் அட்லீ. ராஜா ராணி படம் மூலம் பிரபலமான இவர் இயக்குனர் சங்கரின் மாணவர் என்றே சொல்லலாம்.

சினிமாவில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை கொடுத்துவிட்டார். தீவிர விஜய்யின் ரசிகரும் கூட.

கதை குறித்து பல விமர்சனங்கள் இவரின் மீதிருந்தாலும் இளம் வயதில் சாதித்தது பெரிய விசயம் தான். ஒரு வகையில் பார்த்தால் சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் இவரின் வெற்றி ஒரு உத்வேகம் தான்.

மதுரை சேர்ந்த இவர் சீரியலில் நடித்து வந்த பிரியாவை திருமணம் செய்துகொண்டார். இருவரின் ஜோடி புகைப்படத்தை பிரியா அடிக்கடி சமூகவலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் இவர்களுக்கு இன்று திருமணம் நாளாம். இதற்காக தன் கணவர் அட்லீக்கு ஸ்பெஷலான வாழ்த்துக்களை டிவிட்டர் பதிவிட ரசிகர்கள் பலரும் இருவருக்கும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள்.