பிக்பாஸ் சேரனை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம்! உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் பல பெற்றோர்களின் அபிமானியாக மாறிவர் சேரன். தற்போது அவரை ஆவண பட இயக்குனர் அருண்மொழியின் மறைவு செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமாவில் ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அருண் மொழி. காணி நிலம், நாசர் ஹீரோவாக ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.
அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமை, பண்ணையார்கள் என இவரின் படைப்புகள் மிகுந்த கவனத்தை ஈர்த்தன. நிலமோசடி, இசைவானில் இன்னொன்று, மூன்றாம் இனம் என பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
தற்போது 49 வயதாகும் அவர் ஜப்பானில் திரை விழாவில் படம் பார்த்துவிட்டு திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சேரன் தன் இரங்கலை பதிவு செய்துள்ளார்.
திரைமொழி ஆக்கத்தில் தனி ஆளுமையுடன் நிறைய வாழ்வியல் ப்ரச்னைகளை ஆவணப்படங்களாக பதிவு செய்து படித்த படிப்பை இச்சமூக விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய படைப்பாளி திரு. அருண்மொழி அவர்களின் இழப்பு ஈடுசெய்ய இயலாதது.. வருந்துகிறேன்.. அவரின் ஆன்மா அமைதிகொள்ளட்டும். pic.twitter.com/PfdY2bM0da
— Cheran (@directorcheran) November 10, 2019