Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறந்துபோன முக்கிய இயக்குனர்! கவலையில் ஆழ்ந்த சினிமா பிரபலங்கள் இறுதி அஞ்சலி

தமிழ் திரையுலகில் நேற்று பலரையும் மிக மன வருத்தத்திற்குள்ளாக்கிய செய்தி இயக்குனர் அருண்மொழியின் மரணம். நடிகர், இயக்குனர், ஆவண பட இயக்குனர், எழுத்தாளர், ஆசிரியர் என பல திறமை கொண்டவர்.

ஜப்பானில் நடைபெற்ற திரைவிழாவிற்கு சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கடந்த நவம்பர் 9 இரவில் காலமானார். அவரின் உடலுக்கு நேற்று சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் இறுதி சடங்கு செய்யப்பட்டது.

அவருக்கு நேற்று பிக்பாஸ் புகழ் இயக்குனர் சேரன் இரங்கல் தெரிவித்திருந்தார். மேலும் இயக்குனர் வசந்த், லெனின் பாரதி, ஹரிஹரன் என பல பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் எழுத்தாளர்கள், முகநூல் பதிவர்கள், மாணவ மாணவிகள், திரைப்பட இயக்குனர்கள் என பலர் அவரது மறைவிற்கு இரங்கல் அஞ்சலிகள் தெரிவித்துள்ளனர்.