Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியலை வெளுத்து வாங்கிய பாடகி சின்மயி- ஆதரிக்கும் ரசிகர்கள்

பாடகி சின்மயி, கடந்த சில வருடங்களாக பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்காக போராடுபவர். MeToo என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் அதிக கொண்டு போய் சேர்த்ததே இவர் தான் என்று கூறலாம்.

சமீபத்தில் கூட கமல்ஹாசன் அலுவலக திறப்பு விழாவிற்கு வைரமுத்து வந்ததை பார்த்து அவர் கோபமாக டுவிட் போட்டார்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் காட்சியை பதிவு செய்துள்ளார். அதில், பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று நாயகன் பெண்களை பார்த்து திட்டுவது போல் காட்சி உள்ளது.

ரெட்டை ரோஜா சீரியலில் இடம்பெற்ற அந்த காட்சியை பதிவு செய்து வௌங்கிடும் கலாச்சாரம் என டுவிட் செய்திருக்கிறார்.

பெண்களை திட்டும் அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.