Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி ஹீரோவிடம் கதை சொன்ன வெற்றிமாறன், ரசிகர்கள் உற்சாகம்! நடக்குமா?

வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் மிகப்பெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்து யாருடன் இணைவார் என்பது தான் பெரிய கேள்வியாக இருந்து வருகின்றது. பாலிவுட்டில் கூட இவருக்கு அழைப்பு வந்துக்கொண்டு இருக்கின்றது.

அப்படியிருக்க வெற்றிமாறன் சூர்யாவிடம் ஒரு கதை சொன்னதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எப்படியும் இந்த கூட்டணி சேர்ந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், இந்த செய்தி தான் இன்று சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல். பொறுத்திருந்து பார்ப்போம்.