பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் மக்கள் மனங்களை வென்றவர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். கவின் லாஸ்லியா விசயத்தில் ஒரு அப்பாவாக இவர் செயலாற்றியதற்கு பெரும் பாராட்டு கிடைத்தது.
படங்களில் மட்டுமம் நல்ல விசயங்களை சொல்லாது டிவி சானலிலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களிலும் அதை தன் வழியிலும் கடைபிடித்தார். இதனால் அவருக்கு வரவேற்பும் குவிந்தது.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் தங்களின் உண்மையான முகத்தை காட்டாது போலியான வேறொரு புகைப்படம் வைத்து விமர்சித்து வருபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையிலும், அவர்களுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
ஒருத்தரபாத்து சம்பந்தமே இல்லாம பொறாமை பட்டு சாவுறதவிட ஒழுங்கா உழைச்சு பொழைச்சு போட்டியா வந்து நின்னுகாட்டலாம்ல.முகத்தை காமிக்காம இன்னொரு படத்தைவச்சு ஒளிஞ்சுக்குறதவிட நீ உன் போட்டோவ வச்சு தில்லா நின்னு பதில் சொல்லு அங்க ஆரம்பிக்கும் உன் வெற்றி. இதுக்குமேல பதிலுமில்ல.. பதிவுமில்ல. pic.twitter.com/WAAZjtkfMS
— Cheran (@directorcheran) November 14, 2019