Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்கு கதை சொல்ல முயற்சித்தேன்.. சமீபத்தில் பிரம்மாண்ட ஹிட் கொடுத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான விஜய், அஜித், ரஜினி போன்றவர்களுடன் பணியாற்றவேண்டும் என்று அனைத்து இயக்குனர்களுக்கும் ஆசை இருக்கும்.

அசுரன் படம் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித், விஜய், ரஜினி பற்றி பேசியுள்ளார்.

அஜித்தை நேரில் சந்தித்து கதை சொல்ல சில ஆண்டுகளுக்கு முன்பு முயற்சித்தேன் என தெரிவித்துள்ளார் அவர். மேலும் ரஜினி, விஜய் ஆகியோருக்கு ஏற்கனவே கதை கூறியிருப்பதாகவும், சரியான நேரம் வரும் போது அவர்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.