Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்களை ஏமாத்திறாதீங்க.. கமல்60 விழாவில் அரசியல் பேசிய விஜய்யின் அப்பா

நடிகர் கமல்ஹாசனை பாராட்டி இன்று மாலை துவங்கி கமல்60 நிகழ்ச்சி நடந்துவருகிறது. அதில் ரஜினி, ரகுமான், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி மற்றும் அவரது மனைவி ஷோபா ஆகியோர் பங்கேற்றனர்.

மேடையில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியல் பற்றி பேசினார். அரசியலில் கமலின் தைரியத்தை பாராட்டிய அவர், ரஜினியும் அரசியலுக்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

"எங்கள ஏமாத்திராதீங்க.. நீங்க (ரஜினி,கமல்) இருவரும் சேர்ந்தா தமிழ் நாட்டுக்கு நல்லது.. தமிழர்களுக்கு நல்லது. இது என் ஆசை" என கூறியுள்ளார் அவர்.