Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் டுவிட் போட்ட அஜித்தின் 60வது பட தயாரிப்பாளர்- ஆனால் சோகத்தில் தல ரசிகர்கள்

அஜித் இந்த வருடம் மட்டும் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டார்.

தன்னுடைய 60வது படத்திற்காக உடலமைப்பு பிட் செய்யும் பணியில் பிஸியாக இருக்கிறார். அந்த விஷயத்தால் தான் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் படத்தின் பூஜை போடப்பட்ட நாளில் இருந்தே 60வது படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதுவரை அப்படி எந்த ஒரு அப்டேட்டும் இல்லை. ஹைதராபாத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு விருது கொடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை போனி கபூர் ஷேர் செய்ய அஜித் ரசிகர்களோ தல 60 அப்டேட் எங்கே என வருத்தத்துடன் புலம்பி வருகின்றனர்.