பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு வலிமை படத்தையும் தயாரிக்கிறார். மேலும் பிங்க் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார் அவர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ANR விருது விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு விருது அளிக்கப்பட்டது. அதை ஸ்ரீதேவி சார்பில் போனி கபூர் பெற்றுக்கொண்டார். மேடையில் பேசிய போனி கபூர், "ஸ்ரீதேவி இருந்திருந்தால் இந்த விருதை வாங்குவதை பெருமையாக நினைத்திருப்பார்" என கண்ணீருடன் கூறினார்.
மேலும் இதுபற்றி ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் போனி கபூர்.
A big thank you to #ANRAwards #AkkineniFamily, Chairman ANR awards committee @tsubbaramireddy, Chiranjeevi for honoring @SrideviBKapoor with #ANRNationalAwards. @iamnagarjuna #LegendsLiveOn pic.twitter.com/iojHpVuNvS
— Boney Kapoor (@BoneyKapoor) November 18, 2019