Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி தயாரிப்பாளருக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்

சூர்யா, கார்த்தி ஆகியோரின் பல படங்களை தயாரித்துள்ளவர் அவர்களது உறவினர் ஞானவேல்ராஜா. மற்ற நடிகர்களை வைத்தும் பல ஹிட் படங்கள் தயாரித்துள்ளனர்.

2007 முதல் 2009 வரை பல பண பரிமாற்றங்கள் கணக்கில் வரவில்லை என விசாரணைக்கு வரும் படி வருமான வரித்துறை பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் ஆஜராகதாதல் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை . எனவே நேற்று அவருக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார். அடுத்த விசாரணை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.