Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தம்பிகளுக்கு வழிவிடுங்கள்.. நான் விஜய் ரசிகர்களை மட்டும் குறிப்பிடவில்லை: எஸ்ஏசி விளக்கம்

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த கமல்60 பாராட்டு நிகழ்ச்சியில் பேசும்போது நடிகர் ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்தால் தமிழர்களுக்கு நல்லது என கூறினார்.

'நீங்கள் ஆண்டது போதும் என நினைக்கும்போது தம்பிகளுக்கு வழிவிடுங்கள்' என் குறிப்பிட்டார் அவர். விஜய்க்கு வழிவிடுங்கள் என்பதைத்தான் அவர் இப்படி மறைமுகமாக கேட்டுள்ளார் என பேச்சு எழுந்தது.

இந்நிலையில் இது பற்றி SA சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். 'நான் பேசியது என்னுடைய கருத்து தான். விஜய் எந்த விதத்திலும் அதில் சம்மந்தப்படவில்லை. நாங்கள் இருவரும் பொதுவாக அரசியல் பற்றி பேசிக்கொள்ளமாட்டோம். இளம் தலைமுறையினர் நல்ல தலைவரை விரும்பிகிறார்கள் என்று தான் கூறினேன், அதில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அடங்கும். விஜய் ரசிகர்கள் மட்டும் என நான் குறிப்பிட்டு சொல்லவில்லை" என தெரிவித்துள்ளார்.