Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் உண்மையான வசூலை சொல்லுங்க.. தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் வாக்குவாதம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. அதிலும் குறிப்பாக குடும்பமாக அதிகம் ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டர்களில் பார்த்தனர்.

தற்போது பிகில் படத்தின் வசூல் 300 கோடியை தாண்டிவிட்டது என்றும் தமிழ்நாட்டில் மட்டும் 142 கோடி வந்துள்ளது என்றும் தகவல் வெளியானது. மேலும் விநியோகஸ்தர் ஷேர் மட்டும் 82 கோடி வந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுபோல விஸ்வாசம் படத்தின் வசூல் ஷேர் விவரங்களை வெளியிடுங்கள் என பிரபல தயாரிப்பாளர் தனன்ஜெயன் கேஜேஆர் நிறுவனத்திடம் ட்விட்டரில் கேட்டுள்ளார்.

'விஸ்வாசம் வசூல் எவ்வளவு என்பதை படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்திடமே இன்னும் KJR நிறுவனம் தெரிவிக்கவில்லை ' என தனஞ்செயன் குற்றம்சாட்டியுள்ளார்.

இருவருக்கும் இடையே இதற்காக ட்விட்டரில் பெரிய வாக்குவாதம் நடந்துள்ளது.