Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும்.. அருண்விஜய்யிடம் உருக்கமாக பேசிய பிக்பாஸ் வனிதா

பிக்பாஸ் 3 புகழ் வனிதா பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் குடும்ப பிரச்சனை காரணாமாக வனிதா அப்பா விஜயகுமார் உட்பட யாருடனும் பேசுவதில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் வனிதா அவரது தம்பி அருண்விஜய்யின் பிறந்தநாளுக்காக ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

"உனக்கு என்னை பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் உன்னை எனக்கு பிடிக்கும். கருத்து வேறுபாடு தீர்க்கப்படலாம். ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரே ரத்தம்" என வனிதா கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருந்தபோது அடிக்கடி தன் அப்பா மற்றும் குடும்பத்தினர் பற்றி பல நேரங்களில் உருக்கமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருடைய உதவியும் இல்லாமல் எப்படி தன்னுடைய இரண்டு மகள்களை வளர்க்கிறேன் என்பதையும் அவர் கண்ணீருடன் பலமுறை தெரிவித்துள்ளார்.