Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவினுடன் காதல்.. லாஸ்லியாவுக்கு அவரது அப்பா போட்ட கண்டிஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் நடிகர் கவின் மற்றும் லாஸ்லியா இடையேயான காதல் தான்.

அவர்கள் உருகி உருகி காதலித்தாலும் லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே வந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிந்து லாஸ்லியா வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில் அவருக்கு அப்பா ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 'இன்னும் ஒரு வருடத்திற்கும் கவினை பார்க்காமல் பேசாமல் இருக்க வேண்டும் என்பது தான் அது.

ஒரு வருடத்திற்கு பிறகும் காதல் இருந்தால் ஓகே சொல்கிறேன் எனவும் கூறியுள்ளார் என செய்திகள் பரவி வருகிறது. அதனால் தான் தற்போது கவின் மற்றும் லாஸ்லியா பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.