Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி பாடகர் மகன் கைது.. மனைவி அளித்த அதிர்ச்சி புகார்

கானா பாடல்கள் பாடி மிகவும் பிரபலமானவர் கானா பழனி. இவரது மகன் தரணி. அவரும் கானா பாடல்கள் பாடுபவர் தான்.

தரணியின் மனைவி விஜயபானு அளித்துள்ள வரதட்சணை புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் விஜயபானுவுக்கும் தரணிக்கு திருமணம் நடந்துள்ளது. ஐந்து வருடம் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதன்பிறகு தற்போது தான் தரணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதும் தெரியவந்ததாம். அவரது மொபைல் போனில் இருந்த புகைப்படங்கள் மூலமாக தான் இது தெரியவந்துள்ளது.

மேலும் தரணியின் குடும்பம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக விஜயபானு சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் தான் மகளிர் போலீஸ் தரணியை கைது செய்துள்ளனர்.