Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐசரி கணேஷை கடவுள் தான் காப்பாத்தணும்.. கவுதம் மேனனை தான் இப்படி தாக்கி பேசியுள்ளாரா பிரபல தயாரிப்பாளர்?

இயக்குனர் கவுதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் இரண்டு வருடங்கள் தாமதமாக இன்று தான் திரைக்கு வந்துள்ளது.

சிக்கலில் இருந்த அந்த படத்தை தற்போது வெளியிட்டது வேல்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் ஐசரி கணேஷ் தான். அவர் பற்றி ட்விட்டரில் தயாரிப்பாளர் வருண் மணியன் பேசியுள்ளார். "அவர் தைரியமாக பல விஷயங்கள் செய்கிறார். எங்களை போன்ற கார்பரேட் நிறுவனங்கள் சந்தித்ததை அவருக்கு தமிழ் சினிமா துறை செய்யாது என விரும்புகிறேன். நாங்கள் இழந்தது பணம், நேரம் மட்டுமல்ல தொடர்புகளையும் தான்" என வருண் மணியன் தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டை குறிப்பிட்டு மற்றொரு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ட்விட்டரில் பேசியுள்ளார். "கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும். அவரிடம் இருந்து காப்பாற்றட்டும்" என தெரிவித்துள்ளார். கவுதம் மேனனிடம் இருந்து ஐசரி கணேஷை காப்பாற்றட்டும் என்று தான் அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

கவுதம் மேனன் தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூன்று படங்கள் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.