தமிழ் சினிமாவில் பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் மாஸ் ஹீரோக்களுக்கு ஓப்பனிங் சாங் எழுதுவது என்பது மிக சவாலான விஷயம்.
அந்த வகையில் விஜய்க்கு பல சூப்பர் ஹிட் பாடல்கள் எழுதியவர் கபிலன், இவர் தற்போது விஜய் படங்களுக்கு பாடல்கள் எழுதுவது இல்லை.
இதுக்குறித்து அவரே ஒரு பேட்டியில் ‘ஆம், விஜய் சாருக்கு பாடல்கள் தற்போது எழுதவில்லை, விஜய் சாரோட தற்போது வேற குரூப் இயங்கிட்டு இருக்காங்க.
அதையெல்லாம் தாண்டி இயக்குனர் விரும்பும் பாடலாசிரியர் தான் சரி, நாம் அதில் தலையிடக்கூடாது, எல்லோரும் வளர்ந்து வரவேண்டும்’ என்று பதில் அளித்துள்ளார்.
விஜய்யின் போக்கிரி, மதுர, திருமலை ஆகிய படங்களில் கபிலன் பாடல் எழுதியது குறிப்பிடத்தக்கது.