ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துவிட்டு ரசிகர்களிடம் தொடர்ந்து திட்டு வாங்கும் ப்ரகதி, இதோ
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பலரும் பேமஸ் ஆகியுள்ளனர். பலரின் வாழ்க்கை திருப்புமுனையாகவே அமைந்துள்ளது.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி, இவர் கனடா நாட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீர் குடிப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
அதை தொடர்ந்து ரசிகர்கள் எல்லாம், நீங்கள் இப்படி செய்யலாமா?, உங்கள் குரல் என்ன ஆவது என்று அர்ச்சனை செய்து வருகின்றனர்.
இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும், ரசிகர்களால் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை போல, அதோடு, இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது, தற்போது யாரோ இதை ஷேர் செய்ய, இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது...நீங்களே பாருங்கள்...